Posts

Showing posts from June, 2026

‘அப்படியெல்லாம் மனசு புண்படக் கூடாது’

Image
  கருத்துச் சுதந்திரம் நம் காலத்திலும் எட்டாக் கனி தான். படிநிலை சமூகமான இச்சமூகத்தில் எதைச் சொல்ல வேண்டும் , எழுத வேண்டும் என்ற எழுதப்படா கட்டுப்பாடுகள் ஏராளம். என்ன சொல்லப்பட்டது என்பதைத் தாண்டி யார் அதைச் சொன்னார் ? அவருடைய பின்புலம் என்ன ? தாங்கி நிற்கும் நம்பிக்கை எது ? எனத்   தோண்டித் தோண்டி உயிரோடு புதைக்கப்பட்ட சிந்தனையாளர்கள் இங்கு ஏராளம். அவதூறுகளுக்கும் , அரைஉண்மைகளுக்கும் அதிகாரத்திடமிருந்து கிடைக்கும் அரவணைப்பு சிந்தனையாளர்களுக்கு பெரும்பாலும் வேறுவிதமாகவே வெளிப்படுகிறது. எழுத்தாளர் பெருமாள் முருகனை பற்றி அவருடைய புதினம் மாதொருபாகன் சர்ச்சைக்குள்ளான போது தான் அறிய நேரிட்டது. அப்படி என்னதான் அவர் எழுதியிருக்கிறார் என அறிந்துகொள்ள எப்படியோ அதை வாங்கினேன் , படித்தேன். நல்லதொரு புதினம் என்பதைத் தாண்டி என்னை ஒன்றும் அது புரட்சியில் ஈடுபட செய்யவில்லை. பல நேரங்களில் புறந்தள்ளப்படுவதும் ஒருவகையில் நல்லது தான். நம்மைப் பற்றி அறியாதவர்கள் கூட அறிவதற்கான நல்வாய்ப்பு! பிறகென்ன பெருமாள் முருகனின் ஒவ்வொரு படைப்பையும் தீவிரமாக வாசித்திருக்கிறேன். அதில் பூக்குளியும் , பூனாட்சியும...

அந்தத் தவிட்டுக்குருவி இறந்து கொண்டிருந்தது - ஆசைத்தம்பி

Image
வளர்ச்சியின் பெயரால் நடத்தப்படும் இயற்கையின் மீதான வன்முறைதான் மோசமான வன்முறை. இதைப்பற்றிய சிந்தனை மேலெழாமலிருக்க இங்கே மதமும், சாதியும் ஆட்சியாளர்களுக்கும், பெரும் நிறுவனங்களுக்கும் தேவைப்படுகிறது. யார் எப்படி மறைத்தால் என்ன சூழலியல் சீர்கேட்டின் பிரதிபலனை இங்கு அனைவரும் அனுபவித்தே ஆக வேண்டும். பாதிப்பின் அளவில் தான் இங்கு பெரியதொரு வித்தியாசம். வளரும் நாடுகளும், ஏழைகளும், அதிகாரமற்றவர்களும் அடையும் இன்னல்களை அதிகாரவர்க்கமும், பெரும்பணக்காரர்களும், வளர்ந்த நாடுகளும் எதிர்கொள்வதில்லை என்பது தான் நிதர்சனம். ஒரு சில புத்தகங்களை படிக்கும் போது மட்டும் மனம் ஏதோ கனத்துப் போகிறது. பரிணாம வளர்ச்சியில் மனித இனம் தோன்றியே இருக்கக்கூடாதோ என்ற எண்ணம் மேலோங்குகிறது. எல்லா மனிதர்களும் மோசமானவர்கள் இல்லையென்றாலும் சூழலியல் சிந்தனை கொண்டவர்கள் அரிதிலும் அரிதே. தே. ஆசைத்தம்பியின் அந்த தவிட்டுக்குரவி இறந்து கொண்டிருந்தது என்ற கட்டுரைத் தொகுப்பை படித்தேன். சுற்றுச்சூழல் பற்றிய 20 கட்டுரைகளும் 7 பறவைகள் பற்றியளவும் இறுதியில் கலைச்சொற்களும் கொண்ட தொகுதி.  இயற்கையில் எதுவும் தனித்து இல்லை என்பது தான் ஆ...